இந்தப் பாடம் ஒரு வரலாற்றுச்
சான்று கொண்ட
பகுதியை எடுத்துப் புதுவிதமாகப்
பாடியிருப்பதைக்
குறிப்பிடுகிறது. சிறையில் பூத்த நாடகக்
குறுங்காவியம்
மாங்கனி. கற்பனை
கலந்த காதல் சம்பவங்களைப் பற்றிக் கூறுகிறது.
காதல் வாழ்வில்
ஏற்படும் பிரிவுத் துன்பத்தையும், காதல்
கைகூடாமல் இருக்கும் நேரத்தில் ஏற்படும் மன உணர்வுகளின்
வெளிப்பாட்டினையும் எடுத்துச் சொல்கிறது.
இலக்கண வரம்பினை
மீறிய கவிதைப் புனைவான
மாங்கனி ஆடவர்,
பெண்டிர் ஆகியோரின் அழகு
நிலைகளைப் பற்றி எடுத்துரைக்கிறது.
தமிழ் வேந்தர்கள்
மூவரின் வீரம் செறிந்த
பெருமைகளையும் தமிழ்ப் பெண்களின்
கற்பின்
மாண்பினையும் பற்றி எடுத்துச் சொல்கின்றது.
கவியரசு கண்ணதாசன்
தான் கற்ற இலக்கியத்தையும்
தன்னுடைய அனுபவங்களையும் மாங்கனி
காவியத்தில் பதிவு
செய்திருப்பதையும் விளக்குகிறது.
|