பதிற்றுப்பத்து பத்து அரசர்களைப் பற்றிப் பத்துப்புலவர்கள்
பாடிய பாடல்களின் தொகுதி என்றாலும் கால வெள்ளத்தில்
முதற்பத்தும், இறுதிப் பத்தும் அழிந்துபட்டன. தமிழுலகிற்குக் கிடைத்திருப்பவை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து
முடியவுள்ள எட்டுப் பத்துக்களே. முதற்பத்தையும், பத்தாம்
பத்தினையும் சார்ந்த பாடல்கள் சில தொல்காப்பிய உரைகளாலும்,
புறத்திரட்டு என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன.
|