முல்லைத் திணைப் பாடல்களைப் பற்றி முந்திய
பாடத்தில் அறிந்தது போல் இந்தப்
பாடத்தில் குறிஞ்சித்
திணைப்
பாடல்களைப் பற்றி அறியலாம்.
தலைவனும்
தலைவியும்
களவுக் காதலில் கூடி மகிழும் ஒழுக்கத்தைக் கூறுவது
குறிஞ்சித் திணை. இந்நிகழ்வுக்குப் பொருத்தமான
மலைப்பகுதியே பின்னணியாக அமைகிறது. குறிஞ்சி
ஒழுக்கம்
தொடர்பாகவும், அதன்
பின்னணியாக விளங்கும்
நிலம்,
அதன் கருப்பொருள்கள் தொடர்பாகவும், குறிஞ்சிப்
பாடல்களில்
புலவர்கள் காட்டியுள்ள இலக்கிய அழகுகள்
தொடர்பாகவும்
அறிமுகம் செய்து கொள்ள இப்பாடம் துணைபுரியும்.
|