மருதத் திணைக்கு உரிய நிலம் வயலும், வயலைச்
சார்ந்த
பகுதியும் ஆகும்.
மழைக்காலம், குளிர்காலம்,
முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற் காலம் ஆகிய
ஆறு காலங்களுமே மருதத் திணைக்கு உரிய பெரும்பொழுது
ஆகும். இவ்வாறு ஆண்டு முழுவதுமே
மருதத்தின்
பெரும்பொழுது ஆகின்றது.
அதிகாலை இரண்டு மணி முதல் காலை ஆறு மணிவரை
உள்ள நேரத்தை வைகறை
என்று கூறுவர். வைகறை
நேரம்தான் மருதத்திணைக்கு உரிய சிறுபொழுது ஆகும். |