4.1 நெய்தல் புலவர்கள் | |
நெய்தல் திணையில் பல புலவர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய அகநூல்களில் பல பாடல்கள் நெய்தல் திணையில் பாடப்பட்டுள்ளன. ஐங்குறுநூற்றில் நூறு நெய்தல் பாடல்களையும் பாடியவர் அம்மூவனார். கலித்தொகையில் நெய்தல்கலிப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார். நெய்தல்கலிப் பாடல்கள் மொத்தம் முப்பத்து மூன்று. இனி இப்பாடத்தில் ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றின் பாடல்களோ, கருத்துகளோ மேற்கோளாகக் காட்டப்படும் இடங்களில் பாடிய புலவர் பெயர் குறிப்பிடப்பட மாட்டாது. |