நெய்தல் திணைக்கு உரிய நிலம் கடலும், கடல் சார்ந்த
பகுதியும் ஆகும். பெரும்பொழுது ஆறும் நெய்தல்
திணைக்கு உரியன. மருதத்தைப் போலவே நெய்தலுக்கும்
ஆண்டு
முழுவதும் உரிய காலமாகும்.
1) இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி)
2) முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி)
3) கார் காலம் (ஆவணி, புரட்டாசி)
4) குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை)
5) முன்பனிக் காலம் (மார்கழி, தை)
6) பின்பனிக் காலம் (மாசி, பங்குனி)
இவை ஆறும் நெய்தலின் பெரும்பொழுது ஆகும்.
நெய்தல் திணைக்கு உரிய
சிறுபொழுது எற்பாடு. எற்பாடு
என்றால் சூரியன் மறையும் நேரம் அல்லது ஒளி மறையும்
நேரம்
என்று பொருள்படும்.
|