நண்பர்களே! இதுவரை முல்லை, குறிஞ்சி, மருதம்,
நெய்தல்,
பாலை என்ற ஐந்திணைப் பாடல்களைச் சுவைத்து
மகிழ்ந்தீர்கள். இருவர்தம்
ஒத்த அன்பான காதலைக் காட்டும்
அவை அன்பின் ஐந்திணை என்று
அழைக்கப்படுகின்றன.
மாறாக, இருவருள் ஒருவர் மட்டும் காதல் கொள்வது,
பருவப் பொருத்தம்
இன்றிக்
காதல் கொள்வது ஆகியனவும்
உலகில்
உண்டு.
இவற்றைத்தாம் முறையே கைக்கிளை,
பெருந்திணை என்பர்.
சங்க இலக்கியங்களில் கைக்கிளையும்
பெருந்திணையும் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. கைக்கிளை,
பெருந்திணை ஆகியவற்றின் இயல்புகளையும்
அவை
அமைந்த பாடல்களையும் இப்பாடத்தில் அறியலாம். |