2.2 மொழிபெயர்ப்புக் கலையாக்கம்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு ஒரு
தலைசிறந்த கலையாகப் பரிணாமம் பெற்றது. அப்போது
தோன்றிய மொழிபெயர்ப்பு நூல்களெல்லாம் சமயம்
சார்ந்தவையாகவே விளங்கின. மொழிபெயர்ப்பு வரலாற்றில்
தனியிடம் பெற்றுத் திகழ்வது விவிலிய மொழிபெயர்ப்புத்தான்.
இது இன்று பல்லாயிரம் மொழிகளில் மொழியாக்கம்
பெற்றுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் செர்மானிய மொழிக்
கொள்கையாளரும் சீர்திருத்தத் தலைவருமான மார்ட்டின்
லூத்தர் அவர்களால் விவிலியம் முழுமையும் செர்மானிய
மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டைப்
பொறுத்த வரையில்
மொழிபெயர்ப்புக் கலை
எலிசபெத் அரசியாரின்
ஆட்சிக்காலத்தில்தான் உயிர் பெற்றது.
ஹோமருடைய
‘ஒடிசியும்’ ‘இலியட்டும் பல மொழிபெயர்ப்பாளர்களின்
கவனத்தை ஈர்த்தன. பதினேழாம் நூற்றாண்டில்
இங்கிலாந்தில்
கிரேக்க, இலத்தீன் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களைக்
கவர்ந்தன.
ஜான் டிரைடனுடைய ஜூவனல் (Juvenal),
வெர்ஜில்
(Virgil) ஆகியவை மொழிபெயர்க்கப்பட்டன. இச்சூழலை,
1684ஆம் ஆண்டில் லண்டனில் ரோஸ்காமன் என்பவர்
எழுதிய ''மொழிபெயர்க்கப்பட்ட செய்யுளைப் பற்றிய
ஒரு
கட்டுரை'' என்ற நூல் தெளிவாக விளக்கும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
மொழிபெயர்ப்பாளனின்
மனத்தில் பதிய வேண்டிய முக்கியமான பகுதிகள் யாவை? |
விடை |
2. |
கிரேக்க
மொழியிலிருந்து இலத்தீனில் மிகுதியான மொழிபெயர்ப்புக்கள்
செய்த இலத்தீன் எழுத்தாளர்கள் யார்? |
விடை |
3. |
சிரியன்
நாட்டு அறிஞர்கள் எந்த நகரத்தை அடைந்து கிரேக்க அறிவை
அரேபிய மொழிக்குக் கொணர்ந்தனர்? |
விடை |
4. |
அரசு
அதிகார அறிவிப்புகளைப் பேச்சு வழக்கில் மொழிபெயர்க்க
வழிகோலிய அரசன் யார்? |
விடை
|
5. |
விவிலிய
நூலின் புதிய ஏற்பாட்டை இலத்தீனில் மொழிபெயர்க்கப் பணித்தோர்
யார்? மொழிபெயர்த்த அறிஞன் யார்? |
விடை
|
6. |
பன்னிரண்டாம் நூற்றாண்டில்
டோலடோ என்னுமிடத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்த மொழிபெயர்ப்பாளரின்
மூதாதை யார்? |
விடை |
7. |
அடிலாட் யாருடைய
அரபிய நூலை இலத்தீனில் மொழிபெயர்த்தார்? |
விடை
|
8. |
பதினாறாம் நூற்றாண்டில்
தோன்றிய சமயச் சீர்திருத்தவாதியும் மொழிபெயர்ப்பாளரும்
யார்? |
விடை
|
9. |
ஜான் ட்ரைடனின்
எந்தெந்த நூல்கள் முதலில் மொழியாக்கம் பெற்றன? |
விடை
|
|
|