1.0 பாட முன்னுரை
இன்றைய சூழ்நிலையில் மொழிபெயர்ப்பு
என்பது இலக்கியத் துறையிலும் பொதுவான கருத்துப்பரவல் நிலையிலும்
மிகவும் அடிப்படையான தேவைகளுள் ஒன்றாக விளங்குகிறது. உலகம் மிகச்சுருங்கி
இணையம் போன்ற அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக உலக கிராமம் (Global
Village) என்ற அளவில் மிகச் சுருங்கிவிட்டது. இந்த நிலையில் பன்னாட்டு
மக்களுடன் பழகும் வாய்ப்பு அதிகரித்து அவரவர் மொழிகளில் உள்ள விழுமியங்களைப்
(Values) பகிர்ந்துகொள்ளவும், மொழிபெயர்ப்பு வழியாக இருதரப்பு (பரஸ்பரம்)
உறவினை மேம்படுத்திக் கொள்ளவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. ஆகவே மொழி
பெயர்ப்பு என்பது பற்றியும், எவற்றை மொழிபெயர்க்கலாம், எது சிறந்த
மொழிபெயர்ப்பு என்பது பற்றியும் அறிந்து கொள்ள இப்பாடம் உங்களுக்குப்
பயன்படும்.
|