2.6 சிறுகதைகள்
புதினங்களைப் போலவே, சிறுகதைகள் பலவும்
மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் அமைந்துள்ளன. தற்காலத்தில்
மொழிபெயர்ப்புச் சிறுகதைகளுக்கு இதழ்கள் பெருமளவு
இடம் தருகின்றன. நூல்வடிவில் ஒரு ஆசிரியரின் சிறுகதைத்
தொகுப்பை மொழிபெயர்த்து வெளியிடுவதும், பல்வேறு
ஆசிரியர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்துத் தொகுப்பு
நூலாக வெளியிடுவதும் காண முடிகிறது. தமிழில்
ஏறத்தாழ
முந்நூறு நூல்கள் சிறுகதை மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளன.
சிறுகதை என்ற இலக்கியத்துறை உருவாகும் முன்னர்
உள்ள பலவகைப் புராணப் புனைவுகளும்,
தேவதைக்
கதைகளும் மொழிபெயர்ப்பு
வழியாக வந்துள்ளன.
அரபு மொழியிலிருந்து ஆயிரத்தொரு இரவுக் கதைகள்,
ஈசாப் நீதிக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்திலிருந்து கிரிம் தேவதைக் கதைகள், கான்டர்
பரிக் கதைகள் வந்துள்ளன.
• புராண நாடோடிக் கதைகள்
உலக நாடோடிக் கதைகள், குழந்தைகளுக்கான ஆசிய
நாடோடிக் கதைகள், சிறுவர்க்குரிய ஆசிய நாடோடிக்
கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், பீகார் மாநில
நாட்டுக் கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன்
கதைகள், கிரேக்கப் புராணக் கதைத் தொகுதிகளான
கிரேக்கக் கதைகள், மனிதப்பறவை என்பன
குறிப்பிடத்தக்கன.
• உலகச் சிறுகதைகள்
உலக மொழிகள் பலவற்றின் சிறந்த
சிறுகதை ஆசிரியரின்
படைப்புகள் தமிழில் வந்துள்ளன.
ஆஸ்கர் ஒயில்ட்,
நாதானியல் ஆதார்ன், எட்கர் ஆலன் போ,
ஓஹென்றி,
ருட்யார்டு கிப்லிங், பால்ஸாக்,
மாப்பசான், டால்ஸ்டாய்,
புஷ்கின், டாஸ்டாவஸ்கி, அந்தோன்
செகாவ் சிறுகதைகளும்
புதினங்களும் குறிபிடத்தக்கவை.
• இந்திய மொழிச் சிறுகதைகள்
இந்திய மொழிகளான இந்தி, குஜராத்தி, வங்காளம்,
கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் உள்ளன.
இந்திக்கு அடுத்ததாக மிகுதியான சிறுகதைத்
தொகுதிகளைத் தமிழுக்கு வங்காளம் வழங்கியுள்ளது. அரசியல்
கைதி முதலிய வங்கச் சிறுகதைகள் (த.நா. குமாரசாமி 1961)
எனப் பொதுவாகவும் ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன
கதைகள்
(1977),
அவரது பக்திக் கதைகள் (1976), ஏழாவது வாசல்
(நாரா.நாச்சியப்பன் 1980) போன்று குறிப்பாகவும் உள்ளன.
தாகூரின் கதைகள் பல மொழிபெயர்க்கப்பட்டு
உள்ளன.
சரத் சந்திரரின் படைப்புகளும் தமிழில் கிடைக்கின்றன.
• திராவிட மொழிச் சிறுகதைகள்
திராவிட மொழிகளும் தமிழிற்குச் சில சிறுகதைத்
தொகுதிகளை வழங்கியுள்ளன.
|