புனைகதைகளின் மொழிபெயர்ப்பில் பின்பற்ற
வேண்டியவை யாவை?
புனைகதைகளான புதினம், சிறுகதைகள்
முதலியவற்றில் இடம்பெறும் உரையாடல்கள் வட்டார
வழக்கில் இடம் பெற்றிருக்கும். என்னதான் பிறமொழிப்
புலமை இருந்தாலும் வட்டார வழக்குகளைப் புரிந்து
கொள்வதில் தடுமாற்றம் இருக்கும். அவற்றைத் தமிழில்
மொழிபெயர்க்கும் போது எந்த வட்டார வழக்கில்
மொழிபெயர்ப்பது என்பதில் சிக்கல் தோன்றும்.
ஏறக்குறைய பொருத்தமான மொழிபெயர்ப்பு ஆக்கிக்
கொள்ளலாம்.
|