காப்பியங்களில் பெயர்மாற்றம் குறித்துக் குறிப்பிடுக.
வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பெயர்கள்
பலவற்றைத் தமிழ்க் காப்பியங்களில் காண முடிகிறது. சான்றாக,
வசந்தமாலை = வயந்த மாலை; வித்தை = விஞ்சை போன்ற சொற்களைக்
குறிப்பிடலாம்.
பௌத்த சமயப் புலவர் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
என்ற காப்பியத்தில் பாலிமொழியில் உள்ள புத்த சாதகக் கதைகள்
பல தமிழாக்கம் செய்யப்பட்டு மணிமேகலையின் வாழ்க்கை
வரலாற்றுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக சாவக நாட்டு அரசனான பூமிச் சந்திரனைப் பற்றியும்
ஆபுத்திரனைப் பற்றியும் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இவ்விருவர் வரலாற்றையும் இணைத்து மணிமேகலையின் மூன்று காதைகளான
ஆபுத்திரன் திறன் அறிவித்த காதை (13), ஆபுத்திரன் நாடு அடைந்த
காதை (24) ஆபுத்திரன் மணிபல்லவம் அடைந்த
காதை (25) எனும் பகுதிகள் அவற்றைத்
தழுவி அமைந்துள்ளன.
|