தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

பக்திப் பாடல்களில் இதிகாசங்கள் பற்றிய குறிப்பு எவ்வாறு உள்ளது?

பக்திப் பாடல்களான தேவார, திருவாசக, பிரபந்தங்களில் புராண இதிகாசக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்தின் எட்டாம் பாடலிலும் இராவணனைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார். திருநாவுக்கரசரும் பதிகத்தின் கடைசிப் பாடலில் இராவணனைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

குலசேகராழ்வார் இராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தயரதன் புலம்பல், தாலாட்டுப் போன்ற பதிகங்களைப் பாடியுள்ளார். பெரியாழ்வார் கண்ணன் குறும்புகளைப் பற்றிப் பாடியுள்ளார்.

முன்