தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

புதின வளத்திற்கு உலகமொழிகளின் செல்வாக்காக மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் பற்றி எழுதுக.

ஆங்கிலத்தளவு பெருமளவு மொழிபெயர்க்கப்பட்ட உலக, இந்திய, திராவிட மொழிபெயர்ப்புகள் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க சில புதினங்கள் உள்ளன. உலக மொழிகளில் பிரெஞ்சு, ரஷ்யன் போன்றன இந்நிலையில் குறிப்பிடத்தக்கன.

பிரெஞ்சிலிருந்து விக்டர் ஹ்யூகோ, அலெக்ஸாண்டர் டூமோ, அனடோல் பிரான்ஸ், ஜூல்லஸ் வெர்ன் முதலியவர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாப்பசான் படைப்புகள் பலவும் தமிழில் வந்துள்ளன. மாக்சிம் கார்க்கியின் தாய் பலரால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தந்தையின் காதலி (ரகுநாதன், 1963), மூவர் (சு. பாலவிநாயகம், 1962), வாழ்க்கைப் படகு (எஸ். சங்கரன், 1952) என்பனவும் தமிழிற்கு வந்துள்ளன.

லியோ டால்ஸ்டாயின், அன்னா கரீனா, போரும் காதலும், போரும் அமைதியும் முதலிய புதினங்கள் தமிழில் வந்துள்ளன. அலெக்ஸாண்டர் குப்ரின், இவான் துர்க்கனோவ் முதலியவர்களின் புதினங்களும் தமிழில் வந்துள்ளன. ஜெர்மன் மொழியிலிருந்தும் ஆங்கில வழியாகத் தமிழிற்கு வந்த நூல்களும் சில உள்ளன. ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் நல்லதொரு தமிழ் நாவலாக வந்திருக்கிறது. ஸ்பானிஷ் மொழியிலிருந்து வான்டெஸ்ஸின் டான்குவிக்ஸாட் வந்துள்ளது.

முன்