இந்திய மொழிகளிலிருந்து தமிழ் பெற்ற இலக்கியங்கள் எவை?
இந்திய மொழிகள் பலவும் தமிழுக்கு ஏராளமான புதினங்களை
வழங்கியுள்ளன. அவற்றுள் வங்கமொழி முன்னிற்கிறது. இந்தியிலிருந்தும்
மொழிபெயர்ப்பில் படைப்புகள் வெளிவந்துள்ளன. சுதர்சன், ராகுல
சாங்கிருத்யாயன், பிரேம்சந்த் முதலியவர்களின் பல புதினங்கள்
தமிழுக்கு வந்துள்ளன. அவ்வாறே உருது, குஜராத்தி, ஒரிய
மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
வங்க மொழியைப் போலவே, மராத்தியிலிருந்தும் தமிழுக்குப்
பல புதினங்கள் வந்துள்ளன. திராவிட மொழிகளிலிருந்து தமிழ் சில
புதினங்களைப் பெற்றது. கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளிலிருந்து
பல புதினங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|