தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

புதிய சொற்கள் அறிவியல் மொழிபெயர்ப்பில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எழுதுக.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் விரைந்து வளரத் தொடங்கியது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டு இருந்த காலம் அது. ஆங்கிலேயர்களின் தாய்மொழியும் பாட மொழியும் அறிவியல் தொழில்நுட்பச் செய்திகளை ஏந்தி வந்த மொழியும் ஆங்கிலமாகவே அமைந்ததால் அவர்களைப் பொருத்த வரையில் அறிவியலை உணர்ந்து கொள்ள அவர்களுக்குச் சிக்கல் ஏற்படவில்லை. அதே நேரம் ஆங்கில மொழி அறியாதவர்களுக்கு அந்தச் சிக்கல் பெருகியது. இதற்காக மொழிபெயர்ப்பு அவசியமாயிற்று.

முன்