அறிவியல் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுக.
1861இல் ஆர்னால்டு என்பவர் ‘வான சாஸ்திரம்’
என்ற நூலைத் தழுவலாக வெளியிட்டார். சாலமன் என்பவர் ‘க்ஷேத்திர
கணிதம்’ (Geometry) நூலை வெளியிட்டார்.
1868ஆம் ஆண்டு லூமிஸ் என்பவர் ‘தி ஸ்டீம் &
தி ஸ்டீம் எஞ்சின்’ என்ற நூலைத் தமிழில் வெளியிட்டார். இந்த
நூலில் பயன்பட்ட விளக்கப் படங்களுக்கான எண்கள் கூடத் தமிழ் எண்களாக
அமைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஃபிஷ் கிரீனின் முனைப்பான மொழிபெயர்ப்பு
நூலாக வெளிவந்த ‘கெமிஸ்தம்’ (Chemistry) எனும் நூலும்
சிறப்பான மொழிபெயர்ப்பு நூலாகும்.
|