பிற துறை மொழிபெயர்ப்பில் பல்கலைக்கழகங்களின் நிலை என்ன?
அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பதிலும், பாட நூல்களைத்
தமிழில் உருவாக்குவதிலும் தொடக்கக்
காலத்திலேயே தனது பங்களிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செய்துள்ளது.
குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சியில் அது காட்டிய அக்கறை
என்று கூட மதிப்பிடலாம்.
1938ஆம் ஆண்டிலேயே கல்லூரி நிலையில் தமிழில்
அறிவியலைப் பாடமாகப் பயிற்றும் வகையில் வேதியியல் (Chemistry)
நூல்களின் இரண்டு தொகுதிகளை மொழிபெயர்ப்பாகவும்,
தழுவலாகவும் தமிழில் தயாரித்து வெளியிட்டது.
அவ்வாறே 1941ஆம் ஆண்டு இயற்பியல் (Physics)
நூலின் இரு தொகுதிகளை அதேபோன்று தயாரித்து வெளியிட்டது. மதுரை
காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை, அறிவியல் தமிழ் நூல்களை
உருவாக்குவது, கலைச்சொற்களைத் துறை வாரியாக உருவாக்குவது,
அவற்றைக் கொண்டு தமிழ் நூல்களை அந்தந்தத் துறை வல்லுநர்களைக்
கொண்டு எழுதுவிப்பது, கருத்தரங்குகளை நடத்தித் தமிழாக்கப்
பணிகளை ஊக்குவிப்பது, ஆதார நூல்களை வழங்குவது போன்ற பல வழிகளில்
பணியாற்றி வருகின்றன.
டாக்டர். வா.செ.குழந்தைசாமி அவர்கள்
துணைவேந்தராக இருந்தபோதிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் வழியாக
‘களஞ்சியம்’ என்ற காலாண்டு இதழும் வெளிவருகிறது.
|