தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

இந்திய மொழிகளிடையே மொழிபெயர்ப்பு தேவை என்பதற்கான காரணம் தருக.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் அமைந்த நாடுகளில் ஒவ்வொரு மொழியிலும் சமூகப் பண்பாட்டு வெளிப்பாடுகளாய் அமைந்த இலக்கியங்கள் பல தோன்றி மக்களால் படிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தோன்றும் இலக்கியங்கள் அந்தந்த மாநிலத்திலேயே நின்றுவிடாமல், அந்தந்த மொழிபேசும் மக்கள் மட்டுமே கற்றுப் பயன்படுவதாக நின்றுவிடாமல் பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புகள் வாயிலாகச் சென்று அப்பயனை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய நாட்டின் மாநில மொழிகளுக்கிடையே இலக்கிய மொழிபெயர்ப்புகள் தேவை.

முன்