தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

பாரசீக மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள நூல்கள் யாவை?

தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள் பலர், பாரசீக மொழியில் உள்ள கதைகள், உரையாடல்கள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றைச் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். துத்தி நாமா என்ற கிளிக்கதை, பெரிசிலியன் ஸ்டோரிஸ், மனோரஞ்சிதத் திரட்டு, ஹிகயட் லாடியா போன்ற சிறுகதை நூல்கள் பாரசீகக் கதைகளின் தமிழாக்கமாக விளங்குகின்றன. குலிஸ்தான் என்னும் பாரசீகப் புதினம் பூங்காவனம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

முன்