நார்வே நாட்டு நாடக ஆசிரியருள்
ஒருவரைக்
குறிப்பிடுக?
தமிழில் வந்துள்ள அவர் நாடகங்களைக்
குறிப்பிடுக.
நார்வே நாட்டு இப்சனின் நாடகங்கள், தமிழில் பல
வடிவங்களில் நூலாக்கப்பட்டுள்ளன. தி
பில்லர்ஸ் ஆப்
சொசைட்டி (The Pillars of Society), ஆன் எனிமி ஆப்
த பீப்பிள் (An Enemy of the people) என்ற நாடகங்கள்
இரண்டையும் சமூகத்தின் தூண்கள், மக்களின் பகைவன்
என்ற பெயர்களில் கா.திரவியம் மொழிபெயர்த்துள்ளார்.
கோபுரத்தின் உச்சியிலே, தோல்வியின்
சந்நிதானத்திலே என்ற இரு நாடகங்களையும்
கா.திரவியம்
மொழிபெயர்த்துள்ளார். பேய்கள் (Ghosts), காட்டு வாத்து
(The Wild Duck) என்னும் நாடகங்களை துரை.அரங்கசாமி என்பவர் மொழிபெயர்த்துள்ளார். பொம்மையா?
மனைவியா? (The Doll’s house) என்னும் நாடகத்தை,
க.நா.சுப்பிரமணியன் தமிழாக்கம் செய்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் சில, இப்சனின்
நாடகங்கள் சிலவற்றைத் தழுவியனவாக அமைந்துள்ளன.
|