தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

பம்மல் சம்பந்த முதலியார் தமிழில் தந்த ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பற்றிக் கூறுக.

ஹாம்லெட் கதைக் கருவைத் தழுவி பம்மல் சம்பந்த முதலியார் அமலாதித்தன் என்ற நாடகமாக ஆக்கியுள்ளார். மனோகரா என்ற புதியதொரு தழுவல் நாடகத்தையும் உருவாக்கியுள்ளார். இவரே ஜூலியஸ் சீசர் என்ற நாடகத்தைத் தழுவி சிம்மபுரி வீரன் என்ற பெயரில் தழுவலாக அமைத்துள்ளார்.

As you like it, Macbeth, The merchant of Venice ஆகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முறையே விரும்பிய விதமே, மகபதி, வாணிபுர வணிகன் என்ற பெயர்களில் பம்மல் சம்பந்த முதலியார் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்துள்ளார்.

முன்