தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

தமிழுக்கு வந்த ஆங்கிலக் கட்டுரை இலக்கியங்கள் யாவை?

ஷெல்லியின் A defence of poetry எனும் கட்டுரையை வி.ஆர்.எம். செட்டியார், மின்னல் கீற்று என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

அரிஸ்ட்டாட்டிலின் Poetics என்ற நூலை டாக்டர் அ.அ.மணவாளன் கவிதையியல் என்ற கட்டுரைத் தொகுப்பாக அளித்துள்ளார். எட்மண்ட் பர்க்கின் பாராளுமன்றப் பேச்சுகளும், ஆபிரகாம்லிங்கன் போன்ற சிறப்புமிகு பேச்சாளர்களின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பேச்சுகளும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

சார்லஸ் லேம்பின் கனவுலகக் குழந்தைகள், பேகனின் கட்டுரைகள், கார்லைலின் கட்டுரைகள், பெர்னாட்ஷாவின் கட்டுரைகள், இங்கர்சாலின் கட்டுரைகள், எமர்சன், இலியட், பெட்ரண்ட் ரஸ்ஸல், சி.இ.எம்.ஜோடு முதலிய அறிஞர்களின் கட்டுரைகள், சிறு சிறு நூல்களாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், இலக்கிய, கலை ஆய்வுக்கான ஆய்வு அணுகுமுறைகளில் தற்காலத்தில் குறிப்பிடத்தக்க கருத்தாக்கங்களான, அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம், குறியியல், ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்றவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர். சிலர் அவற்றைக் கற்றுக் கருத்துக்கோவையாகத் திரட்டித் தந்துள்ளனர்.

முன்