தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
4) | சொல்லாக்கத்தின் தேவைகள் யாவை? |
ஒப்பீட்டளவில் இன்று மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாகச் சொல்லாக்கம் விளங்குகிறது. நாளும் மாறிவரும் அறிவியல், தொழில்நுட்பத்தின் விளைவாகத் தகவல் தொடர்பியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இன்று தகவல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஒரு மொழியின் வளர்ச்சியென்பது இத்தகைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உள்வாங்கிக் கொண்டு, செறிவாக, வெளிப்படுவதாகும். குறிப்பாக இணையகங்களின் பக்கங்களில் அதிகபட்சமான இடத்தினைப் பிடித்துள்ள மொழிகளே, நன்கு வளர்ச்சியடைந்தவைகளாகக் கருதிட இயலும். இந்நிலையில் கருத்தியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் சொற்கள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்ற மொழிகளே உச்ச நிலையினை அடைய முடியும். தமிழைப் பொறுத்த வரையில்,
''ஆட்சி மொழியாகவும் உயர்கல்வியில் பயிற்று மொழியாகவும்
தமிழே இடம்பெற வேண்டும்'' என்பதால், புதிய
சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய முயற்சிகள், தமிழ்மொழியின் வளர்ச்சி
வேகத்தினைத் தூண்டுகின்றன; சொற்களஞ்சியம்
பெருகிடக் காரணமாக அமைகின்றன. |