3.2 மாற்றம்

ஒரு சொல் வடிவ வகுப்பு எவ்வித வடிவ மாற்றமும் அடையாமல் வேறு ஒரு சொல் வடிவ வகுப்பாக ஆக்கமடைவது மாற்றமாகும். இந்தச் சொல்லாக்கத்தினை ஒட்டாக்கங்களிலிருந்து வேறுபடுத்த வேண்டுமா என்ற ஐயம் உள்ளது. மாற்றத்தையும் ஒருவித ஒட்டாக்கமாகக் கருதலாம்.

சில வேர்ச் சொற்கள் பெயரடைகளாகவும் பின்னிலை சொல்லுருபுகளாகவும்

(எ.கா) பின், முன், உள்

பல பெயர்கள் எந்த விதமான ஒட்டையும் பெறாது பெயரடைகளாகவும்

(எ.கா) ஆண் (குழந்தை), மரப் (பெட்டி)

சில வினைகள் எந்த வித ஒட்டையும் பெறாது பெயர்களாகவும்

(எ,கா) அடி, உதை

வினை எச்ச வடிவங்கள் வினையடைகளாகவும்

(எ.கா) பிந்தி, முந்தி

மாற்றம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல இடங்களில் இந்த மாற்றம் எளிதாகவும் முறையானதாகவும் உள்ளது.