6.3
சொல்லாக்கம் : மறு பரிசீலனை
ஒரு நாட்டின் அறிவியல்
தொழில் நுட்பம் பெருக
வேண்டுமாயின் தாய்மொழி மூலம் கற்றல் அவசியம் என்பது
அறிஞர்களால் வலியுறுத்தப்படுகின்றது.
தமிழைப்
பொறுத்தவரையில் பாடமொழியாகவும் ஆட்சிமொழியாகவும்
சட்டப் பூர்வமாக அமல் படுத்தியும், இன்றும் உயர்கல்வியில்
தமிழ் என்பது சாத்தியமற்று உள்ளது. இந்நிலைக்குப்
பல
காரணங்கள் உள்ளன. சமூக, அரசியல்
காரணங்கள்
முதன்மையிடம் வகிக்கின்றன. ஆங்கிலம், ஜப்பான் போன்ற
மொழிகளில் வழக்கிலிருக்கும் பல்வேறு
துறைக்
கலைச்சொற்களுக்கு நிகரான சொற்கள் தமிழில்
பெரிய
அளவில் இல்லை என்பது துறை வல்லுநர்களின் கருத்து.
அதாவது தமிழில் இதுவரை செய்யப்பட்டுள்ள சொல்லாக்க
முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதாகும். எனவே
சொல்லாக்கத்தில் இதுவரை நடைபெற்றுள்ளவற்றை ஆழமான
ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுது
தான்
சொல்லாக்கத்தில் ஏற்பட்டுள்ள சாதனைகள், தேக்கநிலை
போன்றவற்றை மதிப்பிட இயலும். மேலும் எதிர்காலத்தில்
செய்யப்பட வேண்டிய செயல்களும் திட்டமிடுதலும் முறையாக
நடைபெற இயலும்.
தமிழில் நடைபெற்றுள்ள
சொல்லாக்கத்தினை
மதிப்பிடுகையில் பின்வரும் வழிமுறைகள் முக்கிய
இடம்
பெறுகின்றன.
(i) |
சொல்லாக்க
முயற்சியில் நடைபெற்றுள்ள கலைச்
சொற்களைத் தொகுத்து ஆராய்தல். |
(ii)
|
தரப்படுத்துதல். |
6.3.1
கலைச்சொற்களைத் தொகுத்தல்
கடந்த நூறு ஆண்டுகளுக்கும்
மேலாகத் தமிழில்
கலைச்சொல்லாக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன. அறிவியல் மட்டுமின்றி,
பல்வேறு
சமூகவியல் துறைகளிலும் தொடர்ந்து
நடைபெற்று
வந்திருக்கின்றன. பல்வேறு துறை
அறிஞர்களால்
உருவாக்கப்பட்டிருக்கும் கலைச் சொற்களைத்
தொகுத்து,
அவற்றிலிருந்து பொதுமைப் பண்புகளை உருவாக்க வேண்டும்.
கலைக் களஞ்சியம்,
துறை சார்ந்த நூல்கள், ஆய்வு
இதழ்கள், அரசிதழ்கள், அரசு, தனியார்
வெளியிட்டுள்ள
கலைச்சொல் அகராதிகள் போன்றவற்றால், பதிவாகியுள்ள
சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களின் கருத்துகளைப்
பரிசீலிக்க வேண்டும். இதனால் ஒரு
குறிப்பிட்ட துறைச்
சொற்களை உருவாக்கிய முறையிலிருந்து
சொல்லாக்க
நெறிமுறைகளைக் கண்டறிய இயலும்.
மொழிபெயர்ப்புச் சொல்லாக்கத்தில்
பின்பற்றப்பட்ட
நெறிமுறைகளைப் பின்வரும் மூன்று பெரும் பிரிவுகளில்
குறிப்பிடலாம்.
(i) |
பிறமொழியிலுள்ள
ஒரு சொல்லுக்குத்
தமிழில்
ஆக்கப்பட்டுள்ள வெவ்வேறு சொற்கள். |
(ii) |
பிறமொழியிலுள்ள பல சொற்களுக்கு நிகராக ஒரே
தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுதல். |
(iii) |
ஒலிபெயர்ப்பில்
வேற்றுமை. |
பிறமொழிச்
சொல்லுக்குத் தமிழில் பல கலைச்சொற்கள்
காலச்
சூழல், மொழிபெயர்ப்பாளரின் புலமை, சமூகப்
பின்னணி, அறிவியல் போக்கு போன்றன ஆங்கிலத்திலிருந்து
ஒரு சொல்லுக்குப் பல சொற்கள் உருவாக்கப்படுவதற்கான
பின்புலத்தினை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே வழக்கிலிருக்கும்
சொல்லாக்கத்தினை அறிந்து கொள்வதற்கான குறிப்பு நூலும்
இல்லாத நிலையில், ஒரே சொல்லுக்குப்
புதிது புதிதாகச்
சொல்லாக்கம் நடைபெறுவது தவிர்க்க இயலாதது ஆகும்.
சான்று
Refrigerator

குளிர் சாதனப்பெட்டி (1)

குளிர்பதனப் பெட்டி (2)

ஐஸ் பெட்டி (3)

குளிர்ப்புக் கருவி (4)

குளிர்ப்பான் (5)

குளிர்வி (6)
குளிர்மைப் பண்பினைத் தரும் Refrigerator
என்ற
கருவியின் தமிழாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதனால் ஒரே சொல்லுக்குப் பல சொல்லாக்கங்கள்
ஏற்பட்டுள்ளன. இவ்வாறு படைக்கப்பட்ட சொல்லாக்கங்களில்
சில, காலப்போக்கில், நிலை பெறாமல் வழக்கொழிந்து
போகின்றன. எளிமை, மரபுத்தன்மை, மூலச் சொல்லுக்கு
நெருக்கம் போன்றவை சொல்லாக்கம் நிலைபேறாவதற்கு
அடிப்படைக் காரணங்கள் ஆகும்.
பல ஆங்கிலச்
சொற்களுக்கு ஒரே தமிழ்ச்சொல்
தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. தமிழ்ச்
சொற்களஞ்சியத்தின் சிறப்பினை நிகண்டுகள் மூலம் அறியலாம்.
ஆனால் மாறிவரும் புதிய சிந்தனைப் போக்குகள், அறிவியல்
கண்டுபிடிப்புகள் போன்றன புதிய சொல்லாக்கங்களைத்
தேடுகின்றன. சொல்லாக்கத்தில் ஈடுபடும் துறை வல்லுநர்
தமிழில் புலமையற்ற நிலையிலிருக்கும்போது, பல ஆங்கிலச்
சொற்களுக்கு ஒரே சொல் வழங்கப்படும் நிலை ஏற்படுகின்றது.
மேலோட்டமான நிலையில் ஒரே பொருளுடையதாகத்
தோன்றினாலும், ஆழமாக ஆராய்ந்து ஒத்த சொற்களிடையே
பொருள் வேறுபாட்டினைக் கண்டறிய வேண்டும். சான்றாக
air, wind என்ற ஆங்கிலச் சொற்களைத்
தமிழில் காற்று
என்று குறிப்பிடுவது வழக்கில் உள்ளது. கூர்ந்து நோக்கின் air
வேறு, wind வேறு. தமிழ் மரபில்
சூடாமணி நிகண்டு, ‘காற்று’
குறித்து முப்பத்தொரு சொற்களைத் தந்துள்ளது.
இந்தச்
சொல்வளத்தினை நவீனச் சொல்லாக்கத்தினுக்குப் பயன்படுத்த
வேண்டியது அவசியம். அறிவியலைப் பொறுத்தவரையில்
ஒவ்வொரு சொல்லாக்கமும் வரையறுக்கப்பட்ட, நுட்பமான
மாறுதல்களுடன் வடிவமைக்கப்பட வேண்டும்.
சான்று :
wind |
-
|
காற்று |
gale |
-
|
கடுங்காற்று |
storm |
-
|
புயல் |
hurricane |
-
|
சூறை |
breeze |
-
|
தென்றல் |
air |
-
|
வளி |
whirl
wind |
-
|
சுழல் காற்று |
ஒலிபெயர்ப்பில்
வேற்றுமை
பிறமொழி
ஒலிகளுக்கு ஈடான தமிழ் ஒலிகளையும்
கூட்டோசைகளையும் வரையறுத்திட இதுவரையில் நடைபெற்ற
சொல்லாக்க முயற்சிகள் உதவுகின்றன. சொல்லாக்கம் அறிவியல்
அடிப்படையானது எனில் ஒத்த சீர்மை அவசியம். ஆனால் ஒரு
ஆங்கிலச் சொல் பல்வேறு வடிவ
வேறுபாடுகளுடன்
ஒலிக்கப்படும் சூழல் இன்று உள்ளது.
சான்றாக Crova’s
disc என்ற ஆங்கிலச் சொல்
குரோவாவின் தட்டு, க்குரோவா தட்டு, குரோவானின் தட்டு என
மூன்று வகைகளில் ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நிலைமை
எதிர்காலத்தில் சொல்லாக்க முயற்சியில்
களையப்பட
வேண்டியதாகும்.
|