"சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்பார்
திருமூலர். சிவ வழிபாடு
என்பது
சைவநெறி ஆகும். தொல்காப்பியம், பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை ஆகிய பழந்தமிழ் நூல்களில் சிவன் என்ற
சொல் இடம் பெறவில்லை என்றாலும் சிவனைப் பற்றிய
குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறளிலும்
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களிலும்
கல்லாடம் என்னும் நூலிலும் சிவனுக்குரிய அடையாளங்கள்
பலவற்றைக் காணமுடிகிறது. இவற்றையும், சைவம், சைவவாதம்
என்ற சொற்கள் முதன் முதல் மணிமேகலையில் இடம் பெறுவதையும் இப்பாடம் விளக்கிச்
சொல்கிறது. |