சைவ சமயத்தின் முதன்மை நூல்களைச் சைவத் திருமுறைகள்
என்று கூறுவது மரபு. அவற்றைப்
பன்னிரண்டாகப்
பகுத்துள்ளனர். இப்பாடத்தில், திருமுறை என்பதன் விளக்கம்,
திருமுறைகளின் பெருமை, அவை ஓதப்படும் முறைகள்
ஆகியவை விளக்கப்படுகின்றன.
சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருமுறைகள்
பெறும்
இடம், மற்றும் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், யாப்பு, இசை
ஆகியவற்றிற்குச் சைவத் திருமுறைகள்
ஆற்றியுள்ள
பங்களிப்பு - இவற்றை இப்பாடம் அறிமுகப்படுத்துகிறது.
|