3.0 பாடமுன்னுரை
சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் முதற்கண் வகைப்படுத்தப்பட்டுள்ள எட்டுத் திருமுறைகளைத் தேவாரத் திருவாசகங்கள் என்று கூறுவர். சைவத்திருமுறைகள் என்ற முந்தைய பாடத்தில் ஒன்பது, பத்து, பதினொராம் திருமுறைகள் தொடர்பான செய்திகள் திரட்டி வழங்கப்பட்டன. பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரியபுராணம் தொடர்பான விரிவான விளக்கம் பின்வரும் பாடத்தில் விளக்கப்படவுள்ளது. எனவே, தேவாரத் திருவாசகங்கள் என்ற இப்பாடத்தில் மூவர் தேவாரம் மற்றும் திருவாசகம் குறித்த செய்திகள் தொகுத்து உரைக்கப்படவுள்ளன. நூலாசிரியர்களின் சுருக்கமான வரலாறு, காலம்-நூல் அமைப்பும் பகுப்பும், நூற் செய்திகள், தமிழ்ச் சைவ சமய வரலாற்றிலும் தமிழ் இசை வரலாற்றிலும் இவற்றிற்கு உரிய இடம், தம் காலத்திற்குப்பின் இப்பனுவல்கள் சமய - சமூக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் முதலியன இப்பாடத்தில் முறையாக விளக்கி உரைக்கப்படவுள்ளன.