3.6. திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாந் திருமுறையுள் இடம் பெற்றுள்ள திருச்சிற்றம்பலக்
கோவையார் 400 கட்டளைக்கலித்துறைப் பாக்களால்
நடையிடுகிறது. அகப்பொருள் துறைகள் பலவற்றையும் அவை
நிகழும் முறையில் நிரல்படக் கோத்துச் செய்யப்படும் அகப்
பொருள் நூல் வகையைச் சார்ந்தது கோவை என்பது.
திருச்சிற்றம்பலக் கோவையாரே இவ்வகையில் முதல் நூல்
என்பர். தில்லைக் கூத்தப் பெருமானைப் பாடல் தோறும்
இணைத்துப் பாடும் வகையில் புகழ்ந்துரைக்கும் போக்கில்
இந்நூல் நடையிடுகிறது. தில்லைச் சிற்றம்பலவனின்
அருளிப்பாடுகள் பலவும் மிக்க நயத்துடன் இந்நூலுள் எடுத்துக்
காட்டப்பட்டுள்ளன. சான்றாக.