தேவாரம், திருவாசகம் என்ற இப்பாடத்தில்
தேவாரம் தொகுக்கப்பட்டமை, தேவாரப் பண்முறை, தேவாரப் பணிகள் விளக்கப்படுகின்றன.
மூன்று திருமுறைகளை இயற்றியருளிய திருஞானசம்பந்தர்
பெருமை, அத்திருமுறைகளில் கூறப்படும் செய்திகள், அவர் பயன்படுத்திய
புதிய யாப்பு முறைகள் முதலியன விரிவாகப் பேசப்படுகின்றன. அடுத்த
மூன்று திருமுறைகளைப் பாடியருளிய திருநாவுக்கரசர் பற்றிய அறிமுகமும்,
அவர் பாடிய பாடல்களின் சிறப்பும், ஆறாம் திருமுறையாகிய திருத்தாண்டகத்தின்
பெருஞ் சிறப்பும் இடம் பெறுகின்றன. அடுத்து, திருமுறை ஆசிரியர்களுள்
மூன்றாமவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பனுவல் பற்றிப் பேசப்படுகின்றது.
அவருடைய பக்திக் கனிவும் அரிய தொடர்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
எட்டாம் திருமுறையைத் தந்தருளிய மாணிக்கவாசகரின்
அனுபவ வெளிப்பாடுகள் திருவாசகத்தினின்றும் விளக்கப்படுகின்றன.
|