இப்பாடம் பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்குரிய
சிறப்பிடத்தையும் தனித்தன்மையையும் விரிவாக விளக்குகிறது.
இறைவனுக்கு நிகரான அவன் அருள்பெற்ற அடியார்களும்
சிறப்புப் பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறது.
பெரியபுராணம் காப்பியப் பண்புகளைப் பெற்றிருப்பதை
இப்பாடத்தில் கற்கலாம். தொகையடியார்,
தனியடியார்
ஆகியோரின் அறிமுகமும் இப்பாடத்தில் கிடைக்கிறது.
சைவ சமயக் கோட்பாடுகள் பெரியபுராணத்தில்
இடம்
பெறுவதையும் அது ஒரு வரலாற்றுக்
கருவூலமாகத்
திகழ்வதையும் சமூக நோக்குடைய காப்பியமாக விளங்குவதையும் இப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.
சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார்,
திலகவதியார், காரைக்கால் அம்மையார் போன்ற சைவ சமயப்
பெண் தொண்டர்களையும் இப்பாடம் அறிமுகம் செய்கிறது.