5.3 பல்வகை நூல்கள் - நூலாசிரியர்கள் ஒட்டக்கூத்தரை அடுத்து வந்த பல புலவர்கள்
அவர் அளவுக்குப்
புகழ் பெற்றவர்கள்
அல்ல என்றாலும் தம் நூல்களில் சிவ பெருமானைப் பற்றியும் சைவ
சமயக்
கருத்துகளையும் அழகாக வெளியிட்டிருக்கிறார்கள்.
திருமுறைகளுக்கும் பிற்காலத்து வந்த தலபுராணங்களுக்கும்
இடையில் எழுந்த இந்த நூல்கள் மக்களின் மனத்தை அந்த
அளவுக்குக் கவர இயலவில்லை. எனினும் வரலாற்றுத்
தொடர்பையும் சிற்றிலக்கிய வளர்ச்சியையும் இடையறாது
சென்ற சமய வாழ்க்கையையும் சுட்டிக்காட்டும் வகையில் இந்த
நூல்கள் அமைந்துள்ளன. எனவே இப்புலவர்களில் சிலரைப்
பற்றியும் அவர்கள் நூல்களைப் பற்றியும் ஓரளவு அறிந்து
கொள்ளலாமா?
5.3.1 அந்தகக்கவி வீரராகவ முதலியார் முருகன் மீதும், சிவன் மீதும்
சிறந்த சிற்றிலக்கியங்களைப்
படைத்தளித்த மற்றொரு கலைவாணர் அந்தக்கவி வீரராகவ
முதலியார் என்பவர். இவர் தொண்டை நாட்டில், செங்கற்பட்டு
நகரை அடுத்த பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். சைவ வேளாள குலத்தினர். பார்வையற்றவர் இவர் பாடிய நூல்கள்
1. திருக்கழுக்குன்றப் புராணம் மற்றும் பல தனிப்பாடல்கள். |
5.3.2 அதிவீரராம பாண்டியர்
|