5.5 காளமேகப்புலவர்
காளமேகப் புலவர் சிறந்த ஆசுகவி (கொடுத்த பொருளை அடுத்தபொழுதில் பாடும் பாட்டு) பாடும் வல்லமை மிக்கவர். பிறரை ஏசும் எள்ளல் நிறைந்த ‘வசை’பாடுவதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். ‘ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசு புகழ் காளமேகம்' என்றும், ‘வசைபாடக் காளமேகம்’ என்றும் வரும் பழம் பாடல் தொடர்கள் இவர் புலமைக்குச் சான்றாக அமைகின்றன. இயற்பெயர் வரதன். வைணவ சமயத்தினர். காதல் காரணமாகச் சைவம் சார்ந்தார். திருவானைக்கா அகிலாண்டேசுவரி அருள் பெற்றுக் கவிஞரானவர். இவர் பாடிய நூல்களுள் சிறந்தது திருவானைக்கா உலா. மேலும் சித்திர மடல், பரப்பிரமவிளக்கம் என்னும் நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இழிப்பது போல் புகழும் ‘நிந்தாஸ்துதி' பாடுவதிலும் இவர் வல்லவர்.


அகிலாண்டேசுவரி