சைவ சமயம் சார்ந்து எழுந்த பல்வேறு சிற்றிலக்கிய வகை
நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் சுருக்கமாக
இந்தப் பாடம் அறிமுகம் செய்கிறது.
சைவச் சிற்றிலக்கியங்கள் புதிய இலக்கிய வடிவங்களைத்
தமிழ் மொழிக்குத் தந்துள்ளதை இப்பாடம் குறிப்பிடுகிறது.
பெரும்பாலான சிற்றிலக்கிய வகைகளின் முன்னோடிகளாகச்
சைவச்சமயச் சான்றோர் விளங்கியமையை எடுத்துரைக்கிறது.
சைவச் சிற்றிலக்கியங்கள் பலவும், திருமுறைகளுக்கு நிகராக
சைவ மக்களால் போற்றப்படுகின்றன. அவை பாராயண
நூல்களாகவும் விளங்குவதை இந்தப் பாடம் சுட்டுகிறது.
மேலும் அருணகிரிநாதர், குமரகுருபரர் போன்ற பல்வேறு
அருளாளர்களின் நூல்களைப் பற்றிய சிறப்புகள்
விரித்துரைக்கப்படுகின்றன.
|