6.8 தொகுப்புரை சைவ இலக்கியங்கள் குறித்த இந்தப் பாடத்தில் தலபுராணங்கள் குறித்த ஒரு சிறு அறிமுகமாகவே இப்பகுதி அமைகிறது. புலமை நலம் மிக்க சைவப் பெருங்கவிஞர்கள் தங்கள் அளப்பரிய புலமைத் திறத்தைத் தாம் பாடிய தல புராணங்களுள் பதிவு செய்துள்ளனர். விளக்கம் காணப்படாத பல புதிர்களுக்கு இவர்கள் விளக்கம் கண்டு காட்டியுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருங்காப்பியங்கள் அதிகம் காணப்படவில்லை என்ற வறிய நிலையை இத்தகைய தலபுராணங்கள் பெருமளவுக்குப் போக்குகின்றன. |
|