பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அறநூல்களாகக் கருதப்படுகின்றன. அவை நீதிக்கருத்துகளை வெளியிடுகின்றன. அதன்மூலம் மக்கள் வாழ்வை வளப்படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன. அற நூல்களுள் ஒன்றான திருக்குறள் காமத்துப்
பாலில் வரும்,
என்னும் குறளில் உள்ள இரண்டாம் அடிக்கு, ‘செங்கண்மால் உலகம்’ என்பார் உரையாசிரியர் பரிமேலழகர். மாவலி அரசனிடம், குள்ள வடிவம் உடையவனாக மூன்றடி மண் கேட்டதையும், கண்ணனாய்க் குருந்த மரத்தைச் சாய்த்ததையும், வண்டி வடிவில் வந்த அசுரனைக் கொன்றதையும் திரிகடுகம் கடவுள் வாழ்த்துச் செய்யுள் பின்வருமாறு சுட்டுகிறது.
(சகடம் = வண்டி) இப்பாடல் வழி திருமாலின் திரு அவதாரச் சிறப்பையும், திருவடியின் பெருமையையும் அறிய முடிகிறது. |