வைணவம் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களில் உள்ளன. வைணவம் பற்றி மட்டும் போற்றிய நூல்கள் தேவை கருதித் தொகுக்கப்பட்டன. சைவ சமயத்தைப் பற்றிய தொகுப்புப் பன்னிரு திருமுறை என அழைக்கப்பட்டது போல் வைணவ சமயம் பற்றிய தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என அழைக்கப்பட்டது. வைதிகச் சமயங்களான சைவமும் வைணவமும் புறச் சமயங்களான பௌத்த சமண மதங்களோடு போராடித் தம்மைத் தக்க வைத்துக் கொண்டன. அதன் பின் தங்களுக்குள் சமயத்தைப் பரப்புவதில் போட்டி போட்டுக் கொண்டன. அதன் விளைவு அல்லது விளைச்சல்தான் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். |