இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் எனக் குறிப்பிடுவது
வைணவ மரபு. இம்மூவரும் திருமாலின் மீது கொண்ட
தீராக் காதலால் திருமாலின் அவதாரங்களையும் பல்வேறு அவதாரப் பெருமையையும் விளக்கி இன்பங் காண்கின்றனர்.
திருமழிசை ஆழ்வார் திருமாலிடம் கொண்ட அளப்பரிய காதலால் யாதுமாகி
நின்ற திருமாலை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கி மகிழ்கிறார்.
இவர்களைப் பற்றியும், இவர்களின் பக்தியுணர்வால்
பாசுரங்கள் தோன்றித்
தமிழ் மேலும் வளம் பெற்றதை யும் விளக்குகிறது இப்பாடம். |