E
P20221 - பழந்தமிழ் நூல்களில் திருமால் வழிபாடு


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  • சங்க காலத்திற்கும் முற்பட்ட பழந்தமிழ் நூலாகிய
    தொல்காப்பியத்தில் திருமாலைப் பற்றிய குறிப்புகள்
    இடம்பெறுவதையும் முல்லை நில மக்கள் திணைக்
    கடவுளாகத் திருமாலைக் கொண்டதையும் சான்றுகள்
    வழி விளக்குகிறது.

  • சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
    ஆகியவற்றில் திருமாலின் புகழ் குறிப்பிடப்பட்டிருப்பதும் திருமாலின் அவதாரங்கள் சில இடம் பெற்றிருப்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

  • அறநூல்களுள் திரிகடுகம் திருமாலின் திருவடிச்
    சிறப்பையும் அவதாரச் சிறப்பையும் விளக்குவதை
    எடுத்துரைக்கிறது.

  • காப்பியங்களுள் சிலப்பதிகாரத்தில் திருமாலின் கிடந்த
    கோலமும் நின்றகோலமும் விளக்கம் பெறுவதையும்
    குறிக்கிறது.

  • மணிமேகலையில்     திருமாலின்     அவதாரம்
    பேசப்படுவதையும் குறிக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தொல்காப்பியம் முதல் மணிமேகலை வரை இடம்
    பெற்றுள்ள திருமால் பற்றிய குறிப்புகளைத் தொகுத்துக்
    கொள்ளலாம்.

  • இலக்கியப் பதிவின் வழி பெறும் திருமால்
    அவதாரங்கள் பற்றிய செய்திகளைப் பட்டியலிடலாம்.

  • சிவன், முருகன், கிருஷ்ணன், பலராமர் ஆகிய
    கடவுளரின் வழிபாடுகள் பழந்தமிழ் நூல்களில் இடம்
    பெற்றதை அடையாளங் காணலாம்.

  • தமிழர்களின் வழிபாட்டு முறைகளைத் தொகுத்துக்
    காணலாம்.

  • இராமகாதை பற்றிய கதைக்குறிப்பு, பாரதம் பற்றிய
    கதைக் குறிப்பு ஆகியவற்றைக் கதைவழி
    இனங்காணலாம்.

  • சிலப்பதிகாரம்     ஐம்புலன்கேளாடு இறைவன்
    திருநாமத்தைத் தொடர்புப்படுத்திக் காட்டிய வழி
    சமயத்தின் சிறப்பைக் கணித்து மகிழலாம்.

பாட அமைப்பு