6.0 பாட முன்னுரை

வைணவக் காப்பியங்களைப் பற்றி விரிவாகக் காப்பியங்கள்
என்ற தாளில் பார்த்திருப்பீர்கள். அதனால் வைணவ சமயக்
காப்பியங்கள் பற்றி இங்கு மிகச் சுருக்கமாகவே கூறப்படுகிறது.
மழை பெய்வதற்கு முன் மழைக்கான அறிகுறிகள் தோன்றும்;

மழை பெய்த பின்னரும் மழை பெய்ததற்கான அடையாளம்
தென்படும். அதுபோல, பக்தி இயக்கத்திற்கு முன்னும் பின்னும்
பல இலக்கியப்பதிவுகள், இலக்கணப் பதிவுகள் உள்ளன.
அவற்றை வைணவம் வளர எப்படிப் புலவர்கள் பயன்படுத்திக்
கொண்டனர் எனக் காண்போமா?