கம்பராமாயணம்,
வில்லிபாரதம்,
பாரத வெண்பா,
அரங்கநாதர்
பாரதம் போன்றவை
வைணவக் காப்பியங்கள்
என
வழங்கப்படுகின்றன.
இராமாவதாரத்தையும்
கிருஷ்ணாவதாரத்தையும்
அவை விரிவாகப்
பேசுகின்றன.
திருமாலின் மேற்கூறிய
இரு அவதாரங்களையும்
காப்பியங்களாக்கித்
தருகின்றன.
6.1.1 கம்பராமாயணம்
கம்பரின்
காப்பியம் திருவரங்கத்தில்
வைணவ ஆச்சாரியர்
நாதமுனிகள் தலைமையில்
அரங்கேறியது.
என்பன கடவுள் வாழ்த்துக் காட்டும் அவதாரங்கள்
ஆகும்.
6.1.3 பாரத
வெண்பா
வெண்பா யாப்பில்
பெருந்தேவனாரால்
இயற்றப்பட்ட
காப்பியம்
பாரத வெண்பா;
இந்நூல் முழுமையாகக்
கிடைக்கவில்லை.
6.1.4 அரங்கநாதர்
பாரதம்
அரங்கநாதக்
கவிராயர்,
வில்லி புத்தூரார்
பாடாதுவிட்ட
சௌப்திக பருவத்தின்
பின் பகுதியில்
அமைந்த சிகாமணி
சருக்கம் முதல்
சொர்க்கா ரோகணப்
பருவம் வரைபாடிப்
பாரதக் கதையை
முடித்துள்ளார்.
இதில் 2477 பாடல்கள்
உள்ளன எனவே
இந்நூல் அவர்
பெயரை இணைத்து
அரங்கநாதர்
பாரதம் என்று
வழங்கப்படுகிறது.
மேற்காட்டிய
காப்பியங்கள்
தவிர இதிகாசக்
கிளைக்கதைகேளாடு
தொடர்புடைய
குசேலோபாக்கியானம்,
நளவெண்பா, நைடதம்
போன்ற நூல்களும்
உள்ளன. இவை,
வைணவத்தின்
கதைக்கூறுகள்
வளமார்ந்த
காப்பியங்கள்
தோன்றத் துணைநின்றமைக்கு
எடுத்துக்காட்டாகும்.
• நல்லாப்பிள்ளை
பாரதம்
பதினெட்டாம்
நூற்றாண்டில் வாழ்ந்த
நல்லாப்பிள்ளை
என்பவர்
வியாச பாரதம்
முழுவதையும் தமிழில்
பாடியுள்ளார்.
இவர்
வடமொழியில்
உள்ளவாறே
பதினெட்டுப்
பருவங்களையும்
பாடியுள்ளார். நல்லாப்பிள்ளை
பதினெட்டுப் பருவங்களையும்
132 சருக்கங்களில்
14000 பாடல்களில்
பாடியிருக்கிறார்.
வில்லிபுத்தூர்
ஆழ்வார் பாரதத்தில்
உள்ள பாடல்களின்
அழகைக் கண்டு,
அவருடைய
பாடல்களில்
பெரும்பாலானவற்றை
எடுத்துக் கொண்டார்.
வில்லிபுத்தூர்
ஆழ்வார் பாடாமல்
விட்ட கதைப்பகுதிகள்
எல்லாவற்றையும்
இவர் பாடியுள்ளார்.
வில்லிபுத்தூர்
ஆழ்வார் பாடிய
பகுதிகளில் சுருக்கமாக
உள்ள பகுதிகளையும்
விரித்துப்
பாடியுள்ளார். நல்லாப்பிள்ளை
பாரதத்தில்
வில்லிபுத்தூர்
ஆழ்வார் பாரதமும்
அடக்கம்.