இந்தப் பாடம் என்ன
சொல்கிறது? |
இந்தப் பாடத்தில் வைணவக்
காப்பியங்களாகிய கம்பராமாயணம்,வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர்
பாரதம் போன்றவை விளக்கம் பெறுகின்றன.
வைணவ
சமயத்தார் எழுதிய மாறன் அலங்காரம்,
மாறன்
அகப்பொருள், மாறன் பாப்பாவினம் ஆகிய இலக்கண
நூல்களும் பேசப்படுகின்றன. இவை தவிர
வைணவச்
சிற்றிலக்கியங்களாகிய இராமானுச நூற்றந்தாதி போன்ற சில
அந்தாதி நூல்களும் சிலேடை உலா, சீரங்க நாயகியார்
ஊசல், திருவரங்கக் கலம்பகம், முக்கூடற்பள்ளு போன்ற
சிற்றிலக்கியங்களும் விரிவாகச் சொல்லப்படுகின்றன. தமிழ்
இலக்கியத்தின் செழுமைக்கு வைணவம்
ஆற்றிய
பாங்கினையும் விளக்குகிறது இப்பாடம்.
|