![]() |
|
P20233 சமண இலக்கணங்கள், நிகண்டுகள் மற்றும் உரைகள் |
|
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
|
|
இலக்கியங்களைப் படைத்த சமணச் சான்றோர் மொழி வளத்தை மேம்படுத்த இலக்கணங்களைப் படைத்தனர். அகராதிகளின் முன்னோடிகளான நிகண்டுகளைச் சமணர்கள் எழுதியது, இலக்கியத்திற்கு உரை எழுதி வளம் சேர்த்தது, இலக்கணத்திற்கு உரை எழுதி மொழிவளத்தை மேம்படுத்தியது ஆகியவை இந்தப் பாடத்தில் விரிவாகச் சொல்லப்படுகின்றன. |
|
இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
| இலக்கணங்களைப் படைப்பதில் முன்னோடிகளாய்ச் சமணப் பெரியோர் விளங்கியதைச் சுட்டிக் காட்டலாம். | |
| இலக்கணத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் தனித்தனி நூல்களை எழுதி விளக்கப்படுத்தியமையைப் பகுத்தும் தொகுத்தும் காணலாம். | |
| நிகண்டுகள் அகராதிகளின் முன்னோடிகளாக அமைந்த தன்மையை எடுத்துக்காட்டலாம். | |
| இலக்கிய இலக்கண நூல்களுக்கு உரை எழுதுவதிலும் சமணர்கள் தங்கள் பங்கைச் சிறந்த முறையில் அளித்துள்ளமையை அறிந்து கொள்ளலாம். | |
![]() |