இந்தப் பாடம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கால
வகையில் பாகுபாடு செய்து
இக்கால இலக்கியங்களைத் தெளிவுபடுத்துகிறது. இக்கால
இலக்கியங்களின்
பிரிவுகள், அவற்றின்
தோற்றம், வளர்ச்சி,
உரையாசிரியர்கள், உரைநடை
ஆசிரியர்கள் பற்றியும்
கூறுகிறது. உரைநடையாசிரியர்கள் ஆற்றியுள்ள
தமிழ்த்தொண்டைப் புலப்படுத்துகின்றது.
இக்கால
இஸ்லாமியக் கவிதை - உரைநடை இலக்கியங்கள்
பற்றிப்
பார்க்கும்
போது, இஸ்லாமியப் படைப்பாளிகள்
இஸ்லாமிய
இலக்கியம் அல்லாத பொதுவான
படைப்புகளைப்
படைத்துள்ளமை கவனிக்கத்தக்கது. அது
இப்பாடத்தில்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
முதல் இஸ்லாமிய உரைநடை இலக்கியம்
வெள்ளாட்டி மசலா என்பதையும் அவ்விலக்கியம் தோன்றிய
சூழலையும் தெளிவுபடுத்துகின்றது.
|