தன் மதிப்பீடு : விடைகள் - I | |
4. | கலிவெண்பாவின் அளவும் அமைப்பும் கூறுக. |
13 அடி முதல் பல அடிகளில் வரும். தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசைக் கலிவெண்பாவாகும். இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோரெதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் ‘கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வருவது நேரிசைக் கலிவெண்பா ஆகும். இன்னிசைக் கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும், நேரிசைக் கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும். |
|
முன் |