5.5 தொகுப்புரை


தமிழில் உருவான மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றின் தோற்றம் பெயர்க்காரணம், நோக்கம், படைப்பின் பரப்பு, வளர்ச்சி  ஆகியன குறித்து இப்பாடத்தில் அறிந்துகொண்டீர்கள். இருவகைக்  கவிதைகளின் உருவம், உள்ளடக்கம், உத்தி ஆகியன குறித்தும் அறிந்து கொண்டீர்கள். மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும்  இடையிலான வேறுபாடுகளை அறிந்து படைக்க இச்செய்திகள்  உதவியாக அமைவன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

புதுக்கவிதையின் ஜீவாதாரமாகக் க.நா.சுப்பிரமணியம் கூறுவது யாது?

(விடை)
2) ‘சர்ப்ப யாகம்’ யாருடைய படைப்பு? (விடை)
3) காலக்கிழவி கழற்றி வைத்த பல்செட் எது? (விடை)
4) சிலேடை பாடுவதில் வல்லவர் யார்? (விடை)
5)

பிறிதுமொழிதலுக்கு இணையான புதுக்கவிதை உத்தியாக எதனைக் கூறலாம்?

(விடை)