தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(4) |
இடைக்காலப் பெண்ணிய நாவல்கள் பற்றி விளக்குக. |
எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளையின் மருத்துவன் மகள், எம்.வி. வெங்கட்ராமின் ஒரு பெண் போராடுகிறாள், நித்திய கன்னி போன்றவை இடைக்காலப் பெண்ணிய நாவல்களாகும். தமிழில் எழுதப்பட்ட முதல் பெண்ணிய நாவலாக மருத்துவன் மகளைக் கருதலாம். நித்திய கன்னி நாவல் மகாபாரதத்தில் வரும் கிளைக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. |