காண்ட் என்பவர் தத்துவம் என்பது
உணர்தல் என்ற
ஒரு விஞ்ஞானமாகவும், அதன் ஆய்வாகவும் விளங்குகிறது
என்கிறார். டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள், உண்மையை
உள்ளபடியே உணர உதவும் தருக்க அடிப்படையையே
தத்துவம்
என்கிறார் (தருக்கம் - நியாயவாதம்).
தத்துவம் என்பது முழுமையான அறிவியல் சிந்தனையின்
தொகுப்பேயாம். தத்துவம்
மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச்
சென்று உண்மைகள், மெய்ம்மைகள் பற்றிய அறிவினைக்
கொடுக்கின்றது. தத்துவம் உயிரை இயக்கும் சக்தியாகக்
கருதப்படுகின்றது.
மேற்கண்டவற்றின் மூலம் தத்துவம் என்பதன் உட்பொருளை
முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய தத்துவக்
கருத்துகளை, நெறிகளை உள்ளடக்கிய சிறுகதைகளின் மூலம்
தத்துவம் சார்ந்த அறிவினைப் பெறுவதே இப்பாடத்தின்
நோக்கமாகும்.