4.6 தொகுப்புரை |
மொழி வளம் பெற்றபோது கவிதை பிறந்தது.
கவிதையிலிருந்து உரைநடை தோன்றியது. உலகெங்கும்
கவிதையைச் சார்ந்தே உரைநடை வளர்ச்சி பெற்றது. |
உரைநடை மெல்ல,
மெல்லச் செய்யுளிலிருந்து வேறுபட்டு
மாற்றங்கள் பெற்றது. உரை நூல்கள் தோன்றின. செய்யுளை
விளக்க உரைகள் எழுதப்பட்டன. உரையிடையிட்ட பாட்டுடைச்
செய்யுள்கள் காப்பியங்களில் பயன்படுத்தப்பட்டன. |
உரைநடை பலவகைகளைக்
கொண்டதாக அமைந்தது.
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றன உரைநடை பற்றிய
குறிப்புக்களையும், உரைநடை வரிகளையும் தந்தன. |
இறையனார் களவியல்
உரை, பாரத வெண்பா போன்றன
தெளிவான ‘உரைநடை’யை அறிமுகப்படுத்தின. கல்வெட்டுகள்
பெரும்பாலும் உரைநடையிலேயே பொறிக்கப்பட்டன.
மணிப்பிரவாள நடை பிறமொழிக் கலப்பால் உருவானது. |
உரையாசிரியர்கள்
காலம் ‘உரைநடை’க்குப் புதிய
எழுச்சியைத் தந்தது. |
உரைநடையின் முக்கியத்துவம்
இக்காலத்தில் உணரப்பட்டது.
உரைநடை, ‘இலக்கியம்’ என்ற தன்மையை இக்காலத்தில்தான்
பெற்றது. |
மேலைநாட்டார்
வரவு உரைநடையின் திசையை மாற்றியது.
‘எளிய தமிழ் உரைநடை’ என எல்லா மக்களும் படிக்கும்படி
ஆனது. ஆங்கிலக் கல்வி, அச்சு இயந்திர வருகை ஆகியன
உரைநடையைப் பொதுமக்கள் சொத்தாக மாற்றியது. |
பேச்சு
உரைநடை, எழுத்து நடை எனப் பிரிந்து நிற்கும்
தமிழில் இன்று, ஊடகங்கள் பேச்சு உரைநடையையே முன்
நிறுத்துவதைக் காணலாம். |
1. |
‘நடையியல்’ என்ற நூலை எழுதியவர் யார்? |
விடை |
2. |
தொல்காப்பியர் எத்தனை வகை உரைநடைகள் இருந்ததாகக் கூறுகிறார்? |
விடை |
3. |
உரைநடையின் ஆரம்ப வடிவத்தை எந்த இலக்கியத்தில் நாம் முதலில் அறிகிறோம்? |
விடை |
4. |
தமிழ் உரைநடை வரலாற்றில் சிறப்பிடம் பெறும் உரை எது? |
விடை |
5. |
உரையாசிரியர் காலம் எனப்படுவது எது? |
விடை |
6. |
எழுதுபவனின் சொந்த ஆளுமை வெளிப்படும்படியாக எழுதப்படும் உரைநடையின் பெயர் என்ன? |
விடை |